ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளருக்கு மக்கள் நீதி மையம் ஆதரவு அளித்துள்ளது.
இதுகுறித்து கட்சி தலைவர் கமல்ஹாசன் அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளருக்கு மக்கள் நீதி மய்யம் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்துள்ளோம். அனைவரும் ஒருங்கிணைந்து மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வெற்றிபெற செய்து, மதவாத சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக ஆ.அருணாசலத்தை நியமித்துள்ளேன் என்று கூறினார்.