பெப்சிகோ நிறுவனம், தனது செயல்பாடுகளை எளிமைப்படுத்தும் நோக்கில், நூற்றுக்கணக்கானோரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, நியூயார்க்கில் அமைந்துள்ள பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை வளாகத்தில் ஆட்குறைப்பு செய்யப்படும் என்று தெரிய வந்துள்ளது. நிறுவனத்தின் பணியாளர்களுக்கான அறிவிப்பில் இந்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் பெருமளவு பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், உணவுத்துறை சார்ந்த நிறுவனம் ஒன்று, பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. பெப்சிகோ நிறுவனம், பெப்சி குளிர்பானம் மட்டுமின்றி, குவேக்கர் ஓட்ஸ், பிரிட்டோ லே சிப்ஸ், மவுண்டன் டியூ குளிர்பானம் ஆகியவற்றையும் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.