திருவல்லூரில் 452 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா திங்கட்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவர். அதன்படி இந்த ஆண்டு சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத வகையில் விநாயகர் சிலைகளைத் திருவள்ளூரில் 63 இடங்களிலும், திருத்தணி 98, ஊத்துக்கோட்டை 204, கும்மிடிப்பூண்டி 67, பொன்னேரி 20 உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 452 சிலை வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.