ஒழுங்குமுறை ஆணையம் மின்வாரியத்திற்கு மத்திய அரசு நிறுவனத்திடம் இருந்து 500 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரம் வாங்க அனுமதி அளித்துள்ளது.
தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்வாரியம் மத்திய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்திடம் இருந்து 500 மெகா வாட் சூரிய சக்தி மின்சாரம் கொள்முதல் செய்ய அனுமதி கேட்டிருந்தது. இந்த நிலையில் மின்வரியத்தின் கோரிக்கையை பரிசீலனை செய்த ஒழுங்குமுறை ஆணையம் 25 ஆண்டுகளுக்கு ஒரு யூனிட்க்கு ரூபாய் 2.72 என்ற விலையில் 200 மெகா வாட், ஒரு யூனிட் 2.73 என்ற விலையில் 300 மெகாவாட் வாங்க அனுமதி அளித்துள்ளது














