ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கை எதிர்த்து ஒ௫வர் தீக்குளிப்பு 

September 21, 2022

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு அரசு இறுதிச் சடங்கை நடத்துகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒ௫நபர், பிரதமர் அலுவலகத்திற்கு முன் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டுள்ளார். பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜப்பானின் முன்னாள் பிரதமரான ஷின்சோ அபே, ஜூலை 8 அன்று பிரச்சாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். அதையடுத்து அவருக்கு இறுதிச் சடங்கு செப்டம்பர் 27 அன்று நடைபெறும் என்று ஜப்பான் அரசு அறிவித்தது. ஜப்பானில் அரசு இறுதிச் […]

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு அரசு இறுதிச் சடங்கை நடத்துகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒ௫நபர், பிரதமர் அலுவலகத்திற்கு முன் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டுள்ளார். பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜப்பானின் முன்னாள் பிரதமரான ஷின்சோ அபே, ஜூலை 8 அன்று பிரச்சாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். அதையடுத்து அவருக்கு இறுதிச் சடங்கு செப்டம்பர் 27 அன்று நடைபெறும் என்று ஜப்பான் அரசு அறிவித்தது. ஜப்பானில் அரசு இறுதிச் சடங்குகள் நடைபெறுவது அரிது. மேலும் இந்த முடிவு ஜப்பானில் சர்ச்சைக்குரியதாக உள்ளது. கருத்துக் கணிப்புகளில் பாதிப் பேர் இந்த யோசனையை எதிர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இறுதிச் சடங்கிற்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் ஒரு குறிப்புடன் ஒ௫ நபர் பிரதமர் அலுவலகத்தின் முன்பு தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டதாகக் ௯றப்படுகிறது. மேலும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட காவலர் ஒ௫வர் காயமடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் டோக்கியோவில் நடந்த இச்சம்பவம் பற்றி காவல்துறை மற்றும் பிரதமர் அலுவலகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu