நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகையைக் கருத்தில் கொண்ட போது கடன் அளவு குறைவாகவே உள்ள நிலையில், உயர்கிரெடிட் மதிப்பெண் பெற்றவர்களே பெரும்பாலான கடன்களை பெற்றுள்ளனர்.
மத்திய அரசின் அண்மை பதிலில், இந்தியாவில் சுமார் 28 கோடி தனிநபர் கடனாளிகள் இருப்பதாகவும், அவர்களுக்கான சராசரி கடன் தொகை ₹4.8 லட்சம் என உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2023ஆம் ஆண்டின் ₹3.9 லட்சத்துடன் ஒப்பிடுகையில் கணிசமான உயரும். இக்கடன்களில் பெரும்பாலும் சொத்து சேர்க்கும் நோக்கில் எடுக்கப்பட்டவை அதிகமாகவுள்ளன. குடும்ப நிதி சொத்துகள், நாட்டின் ஜி.டி.பி.-யுடன் ஒப்பிடுகையில் 2024ல் 106.2% ஆக உயர்ந்துள்ளதாகவும், இதனால் நிதி நிலை முன்னேறியிருப்பதையும் அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவின் வெளிநாட்டு கடன் ₹61.47 லட்சம் கோடியானாலும், அது ஜி.டி.பி.-யில் 19.1% மட்டுமே என்பதால் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.