பெரு நாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் அதிபர் பெட்ரோ காஸ்டிலோ, பெரு நாட்டில் அவசர நிலையை அமல்படுத்துவதாக அறிவித்தார். அவருக்கு பதிலாக துணை அதிபராக இருந்த 60 வயதான பெண் தலைவர் டினா பொலுவார்டே அதிபராக பதவியேற்றார்.
இந்நிலையில் தன்னை காவலில் இருந்து விடுவிக்குமாறு காஸ்டிலோ தாக்கல் செய்த மனுவை பெரு நாட்டின் நீதிமன்றம் நிராகரித்தது. அதே சமயம் அவருக்கு 18 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்க வேண்டும் எனவும் எதிர்தரப்பு வாதிட்டு வருகிறது. இந்த நிலையில் பெட்ரோ காஸ்டிலோவை விடுதலை செய்யவும், டினா பொலுவார்டே பதவி விலகவும் வலியுறுத்தி காஸ்டிலோ ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தில் சில இடங்களில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே நடந்த மோதலில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததனர். இத்தகைய சூழலில் பெரு நாட்டில் மீண்டும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.














