வீடியோ காலின் மூலம் அமைச்சர்கள், அரவிந்த் கெஜ்ரிவாலுடன் உரையாடுவதற்காக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் கடந்த 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் 15ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான அவரது நீதிமன்ற காவல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். இந்த நிலையில் திறமையான டெல்லி அரசை நடத்த ஜெயிலிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கேபினட் மந்திரிகளுடன் ஆலோசனை நடத்த அனுமதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின்படி முதல் மந்திரிகள் மற்றும் பிரதம மந்திரிகளும் நீதிமன்ற காவலில் சிறையில் இருக்கும் பொழுது அரசாங்கத்தை நடத்த தடை விதிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.














