பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூபாய் இரண்டு குறைக்கப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 663 நாட்களாக மாற்றம் ஏதும் இன்றி இருந்தது. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு ரூபாய் 2 குறைக்கப்படும் என மத்திய மந்திரி அறிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் இன்று காலை முதல் பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 88 காசுகள் குறைக்கப்பட்டு 100 ரூபாய் 75 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் லிட்டருக்கு ஒரு ரூபாய் 90 காசுகள் குறைக்கப்பட்டு 92 ரூபாய் 34 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது போக்குவரத்து செலவிற்கு ஏற்ப மாற்றம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.