சீரான விநியோகம் இல்லாததால் சென்னையில் 2-வது நாளாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு

September 6, 2022

சென்னையில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் இரண்டாவது நாளாக டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் மதிப்பு மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பின் அடிப்படையில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படும். இந்நிலையில், கடந்த 108 நாட்களுக்கும் மேலாக சென்னையில் எந்தவிதமான மாற்றமும் இன்றி பெட்ரோல் லிட்டர் 102 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தியன் ஆயில்,பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், […]

சென்னையில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் இரண்டாவது நாளாக டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் மதிப்பு மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பின் அடிப்படையில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படும். இந்நிலையில், கடந்த 108 நாட்களுக்கும் மேலாக சென்னையில் எந்தவிதமான மாற்றமும் இன்றி பெட்ரோல் லிட்டர் 102 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்தியன் ஆயில்,பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், சென்னையில் உள்ள பெட்ரோல் பங்க்குகளுக்கு பெட்ரோல், டீசலை விநியோகம் செய்து வருகின்றன. பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் விநியோகம் செய்யும் பெட்ரோல் பங்க்குகளில் நேற்று டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. டீசல் இருப்பு இல்லையென அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

சென்னையில் இரண்டாவது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. குறிப்பாக நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், எழும்பூர், அண்ணாசாலை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் பாரத் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்நிலை தொடர்ந்தால் லோடு வாகனங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களின் சேவை முடக்கப்பட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu