பிலிப்பைன்சில் அரசு, போராளிகள் இடையே அமைதிப்பேச்சு

November 29, 2023

பிலிப்பைன்சில் அரசும் கம்யூனிஸ்ட் போராளிகளும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்பு கொண்டுள்ளனர். பிலிப்பைன்ஸில் தொடரும் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அந்நாட்டு அரசும் கம்யூனிஸ்ட் போராளிகளும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்பு கொண்டுள்ளனர். நீண்ட காலமாக பிலிப்பைன்ஸில் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளது என்று நார்வே சமரச குழுவினர் கூறியுள்ளனர். நார்வே தலைநகர் ஒஸ்லோவில் கடந்த வாரம் இரு தரப்பில் உயர்நிலைக் குழுவினர் சந்தித்து […]

பிலிப்பைன்சில் அரசும் கம்யூனிஸ்ட் போராளிகளும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்பு கொண்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸில் தொடரும் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அந்நாட்டு அரசும் கம்யூனிஸ்ட் போராளிகளும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்பு கொண்டுள்ளனர். நீண்ட காலமாக பிலிப்பைன்ஸில் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளது என்று நார்வே சமரச குழுவினர் கூறியுள்ளனர்.

நார்வே தலைநகர் ஒஸ்லோவில் கடந்த வாரம் இரு தரப்பில் உயர்நிலைக் குழுவினர் சந்தித்து பேசி இந்த முடிவை எட்டியுள்ளனர் என்று நார்வே வெளியுறவுத்துறை கூறியுள்ளது. இது குறித்து ஒப்பந்தம் கடந்து வியாழக்கிழமை கையெழுத்திடப்பட்டது. முன்னதாக பிலிப்பைன்ஸ் அரசுகளுக்கும் ஆயுதம் தாங்கிய அமைப்புகளுக்கும் இடையேயான போராட்டத்தில் 40 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu