பிலிப்பைன்ஸ் - வெடிகுண்டு மிரட்டலால் 42 விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை

October 6, 2023

வர்த்தக விமானங்களில் வெடிகுண்டுகள் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, 42 விமான நிலையங்களை பிலிப்பைன்ஸ் எச்சரித்துள்ளது.கிட்டத்தட்ட 42 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் இருப்பதால் உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுமாறு பிலிப்பைன்ஸ் கூறியுள்ளது. அந்நாட்டு விமானப் போக்குவரத்து அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, வெடிகுண்டு அச்சுறுத்தல் நம்பத் தகுந்த தகவல் எனவும், மின்னஞ்சல் மூலமாக இது தொடர்பான விவரங்கள் கிடைத்ததாகவும், தெரியவந்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை தரும் செபு மற்றும் பலாவான் தீவுகளுக்கு செல்லும் விமானங்களில் […]

வர்த்தக விமானங்களில் வெடிகுண்டுகள் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, 42 விமான நிலையங்களை பிலிப்பைன்ஸ் எச்சரித்துள்ளது.கிட்டத்தட்ட 42 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் இருப்பதால் உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுமாறு பிலிப்பைன்ஸ் கூறியுள்ளது. அந்நாட்டு விமானப் போக்குவரத்து அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, வெடிகுண்டு அச்சுறுத்தல் நம்பத் தகுந்த தகவல் எனவும், மின்னஞ்சல் மூலமாக இது தொடர்பான விவரங்கள் கிடைத்ததாகவும், தெரியவந்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை தரும் செபு மற்றும் பலாவான் தீவுகளுக்கு செல்லும் விமானங்களில் வெடிகுண்டுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே வேளையில், விமான போக்குவரத்து எந்த இடையூறும் இன்றி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu