ஜெனரல் அட்லாண்டிக்கிடம் இருந்து கூடுதலாக 100 மில்லியன் டாலர்கள் - போன் பே

May 22, 2023

ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்திடம் இருந்து கூடுதலாக 100 மில்லியன் டாலர்கள் முதலீட்டு தொகையைப் பெற்றுள்ளதாக போன் பே தெரிவித்துள்ளது. எனவே, இத்துடன் சேர்த்து, ஜெனரல் அட்லாண்டிக் மற்றும் அதன் இணை முதலீட்டாளர்கள் சேர்ந்து, 550 மில்லியன் டாலர்கள் அதாவது 4555 கோடி ரூபாய் தொகையை போன் பே நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். மொத்தமாக, 12 பில்லியன் டாலர்கள் அதாவது 99387 கோடி ரூபாய் தொகையை போன் பே நிறுவனத்தில் முதலீடு செய்ய ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. போன் […]

ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்திடம் இருந்து கூடுதலாக 100 மில்லியன் டாலர்கள் முதலீட்டு தொகையைப் பெற்றுள்ளதாக போன் பே தெரிவித்துள்ளது. எனவே, இத்துடன் சேர்த்து, ஜெனரல் அட்லாண்டிக் மற்றும் அதன் இணை முதலீட்டாளர்கள் சேர்ந்து, 550 மில்லியன் டாலர்கள் அதாவது 4555 கோடி ரூபாய் தொகையை போன் பே நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். மொத்தமாக, 12 பில்லியன் டாலர்கள் அதாவது 99387 கோடி ரூபாய் தொகையை போன் பே நிறுவனத்தில் முதலீடு செய்ய ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

போன் பே நிறுவனத்தின் சமீபத்திய நிதி திரட்டும் நடவடிக்கையில், ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்திடம் இருந்து பெற்ற நிதியுடன் சேர்த்து, மொத்தமாக 7000 கோடி திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனரல் அட்லாண்டிக் தவிர்த்து, ரிபிட் கேப்பிட்டல், டைகர் குளோபல் மற்றும் டிவிஎஸ் கேபிட்டல் ஃபண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் போன் பே நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu