பூமியின் காந்தப்புலத்தில் துளை ஏற்படுத்திய சூரிய காந்தப்புயல் - பிங்க் நிற ஆரோராக்கள் தோற்றம்

November 8, 2022

சூரியனின் மேற்பரப்பில் உள்ள AR3141 கரும்பகுதி வெடிப்பு அண்மையில் நேர்ந்தது. இதனால், M5 ரக சூரிய கதிர்வீச்சு பூமியை தாக்கி உள்ளது. இந்த சூரிய காந்த புயலால், பூமியின் காந்த புலத்தில்,தற்காலிக வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால், பூமியின் வளிமண்டலத்திற்குள் சக்தி வாய்ந்த கதிர்கள் ஊடுருவி உள்ளன. பொதுவாக, இதுபோன்ற சமயத்தில், வினோதமான நிறங்களில் வளிமண்டலத்திற்குள் சூரிய ஒளி காட்சி அளிக்கும். அதனை ஆரோரா என்பர். அந்த வகையில், ஐரோப்பிய நாடான நார்வேயில், கடந்த நவம்பர் 3ம் தேதி, […]

சூரியனின் மேற்பரப்பில் உள்ள AR3141 கரும்பகுதி வெடிப்பு அண்மையில் நேர்ந்தது. இதனால், M5 ரக சூரிய கதிர்வீச்சு பூமியை தாக்கி உள்ளது. இந்த சூரிய காந்த புயலால், பூமியின் காந்த புலத்தில்,தற்காலிக வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால், பூமியின் வளிமண்டலத்திற்குள் சக்தி வாய்ந்த கதிர்கள் ஊடுருவி உள்ளன. பொதுவாக, இதுபோன்ற சமயத்தில், வினோதமான நிறங்களில் வளிமண்டலத்திற்குள் சூரிய ஒளி காட்சி அளிக்கும். அதனை ஆரோரா என்பர். அந்த வகையில், ஐரோப்பிய நாடான நார்வேயில், கடந்த நவம்பர் 3ம் தேதி, இரவு நேர வானம் இளஞ்சிவப்பு (பிங்க்) ஆரோக்களால் நிறைந்து காணப்பட்டது. மேலும், இரண்டு நிமிடங்களுக்கு இந்த ஆரோராக்களின் காட்சி நீடித்ததாக கூறப்படுகிறது. இளஞ்சிவப்பு நிறத்தில் ஆரோராக்கள் தென்படுவது மிகவும் அரிதான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இதனை பார்த்தவர்கள், இதுபோன்ற சக்தி வாய்ந்த ஆரோராக்கள் கடந்த 10 ஆண்டுகளில் நேர்ந்ததில்லை என்று தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu