சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பின்பு சென்னை மாநகரில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி அரசு மானியமாக தலா ஒரு லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது. பெண் குழந்தைகளுக்கான அரசு நிலத்திட்டங்களில் ஆண்டு வருமானமான உச்ச வரம்பு 72000 - லிருந்து ஒரு லட்சத்து 2 ஆயிரம் வரை உயர்த்தப்படும். மேலும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் மூலம் 200 பயனாளிகள் சுயதொழில் செய்ய ரூபாய் 50,000 மானியம் வழங்கப்பட உள்ளது. அதேபோன்று மகளிர் விடுதிகள், காப்பகங்கள் ,குழந்தை திருமணச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்து உள்ளார்