மெட்ரோ ரயிலில் இன்று முதல் இளஞ்சிவப்பு படை தொடக்கம்

February 15, 2024

மெட்ரோ ரயிலில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இன்று முதல் இளஞ்சிவப்பு படை தொடங்கப்பட்டு உள்ளது. சென்னையில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இதில் தினந்தோறும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு மெட்ரோ ரயிலிலும் நான்கு பெட்டிகள் உள்ளன. அதில் மூன்று பெட்டிகள் பொதுவானவை ஒரு பெட்டி மட்டும் பெண்கள் பயணம் செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள் பயணம் செய்யும் பெட்டியில் சிலர் இடையூறு செய்வதாக தொடர்ந்து […]

மெட்ரோ ரயிலில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இன்று முதல் இளஞ்சிவப்பு படை தொடங்கப்பட்டு உள்ளது.

சென்னையில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இதில் தினந்தோறும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு மெட்ரோ ரயிலிலும் நான்கு பெட்டிகள் உள்ளன. அதில் மூன்று பெட்டிகள் பொதுவானவை ஒரு பெட்டி மட்டும் பெண்கள் பயணம் செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள் பயணம் செய்யும் பெட்டியில் சிலர் இடையூறு செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. அதனை தொடர்ந்து பெண்கள் பயணம் செய்யும் பெட்டியில் ஆண்கள் பயணிக்க கூடாது என்ற அறிவிப்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது. இருப்பினும் சிலர் அதில் பயணம் தொடர்ந்து பெண் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் பெண் பயணிகளின் பாதுகாப்பு மேம்படுத்துவதற்காக இளஞ்சிவப்பு படை தொடங்கப்பட்டுள்ளது. இதில் கராத்தே தற்காப்பு கலை பயின்ற 25 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு மெட்ரோ ரயில் மற்றும் நிலையங்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த சேவை இன்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu