கூகுள் நிறுவனம் தனது பிக்சல் ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் தயாரிக்க உள்ளதாக இன்று அறிவித்துள்ளது. ‘கூகுள் ஃபார் இந்தியா’ நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.இம்மாத தொடக்கத்தில், பிக்சல் 8 ஸ்மார்ட் போன்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டது. தற்போது, இந்த ஸ்மார்ட்போன்கள் 2024 ஆம் ஆண்டு சந்தையில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், கூகுள் பிக்சல் கைபேசிகள் இனிமேல் இந்தியாவில் தயாரிக்கப்படும் என கூகுள் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ரிக் ஆஸ்டர்லோ தெரிவித்துள்ளார். அத்துடன், கூகுள் கைபேசிகளின் முக்கிய சந்தையாக இந்தியா உருவாகி வருவதாக தெரிவித்துள்ளார்.














