பரந்தூரில் மெட்ரோ ரெயில் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்

March 30, 2023

பரந்தூர் விமான நகரமாக உருவாக இருப்பதால் அங்கு மெட்ரோ ரெயில் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், பூந்தமல்லி-பரந்தூர் இடையே 7 முதல் 10 கிலோ மீட்டர் இடைவெளியில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைய உள்ளது. ஏற்கனவே இருந்து வரும் மெட்ரோ ரெயில் நிலையங்கள் 800 முதல் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன. பூந்தமல்லி-பரந்தூர் இடையே அதிக தொலைவில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைப்பதன் மூலம் […]

பரந்தூர் விமான நகரமாக உருவாக இருப்பதால் அங்கு மெட்ரோ ரெயில் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், பூந்தமல்லி-பரந்தூர் இடையே 7 முதல் 10 கிலோ மீட்டர் இடைவெளியில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைய உள்ளது. ஏற்கனவே இருந்து வரும் மெட்ரோ ரெயில் நிலையங்கள் 800 முதல் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன. பூந்தமல்லி-பரந்தூர் இடையே அதிக தொலைவில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைப்பதன் மூலம் மெட்ரோ ரெயில்களை வேகமாக இயக்க முடியும். இதன்மூலம் பரந்தூரில் இருந்து தியாகராயநகர், வடபழனி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு 2 மணி நேரத்துக்குள்ளாகவே வந்துவிட முடியும். பரந்தூர் விமான நிலைய கட்டுமான பணிக்கான ஆலோசகர் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தால் நியமிக்கப்பட்ட பிறகு பரந்தூரில் எதுவரை மெட்ரோ ரெயில் பாதையை கொண்டு செல்லலாம் என்பது குறித்து முடிவு செய்வோம் என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu