சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு நாளை 500 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்

December 22, 2022

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு நாளை 500 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை 25-ந்தேதி கொண்டாடப்படுவதால் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் நாளை இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் 450 அரசு விரைவு பேருந்துகளில் நாளை பயணம் செய்ய 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எல்லா பேருந்துகளும் நிரம்பிவிட்டதால் 500 சிறப்பு பேருந்துகள் நாளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து […]

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு நாளை 500 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை 25-ந்தேதி கொண்டாடப்படுவதால் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் நாளை இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் 450 அரசு விரைவு பேருந்துகளில் நாளை பயணம் செய்ய 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எல்லா பேருந்துகளும் நிரம்பிவிட்டதால் 500 சிறப்பு பேருந்துகள் நாளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், நாளை பிற்பகலில் இருந்து சிறப்பு பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்படும். வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். பொதுமக்கள் தேவையை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்க தயாராக உள்ளோம் என்று அவர்கள் கூறினர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu