திகார் சிறைச்சாலையை நகரின் புறநகர்ப் பகுதிக்கு மாற்றும் திட்டம் மேற்கொள்ளப்படுவதாக அறிவிப்பு.
திகார் சிறைச்சாலை, 1958-ம் ஆண்டு நிறுவப்பட்டு, இந்தியாவின் மிகப்பெரிய சிறை வளாகங்களில் ஒன்றாக விளங்குகிறது. இது 400 ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் ஒன்பது மத்திய சிறைச்சாலைகளைக் கொண்டுள்ளது. தற்போது, முதல்வி ரேகா குப்தா டெல்லி சட்டசபையில் 2025-26 ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் அப்போது கூறியதாவது, திகார் சிறைச்சாலையை நகரின் புறநகர்ப் பகுதிக்கு மாற்றும் திட்டம் மேற்கொள்ளப்படுவதாகவும், அதற்கான கணக்கெடுப்பு மற்றும் ஆலோசனை சேவைகளுக்கான ரூ.10 கோடியை ஒதுக்கவுள்ளதாகவும். இந்த முடிவு, குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள சிறைச்சாலையின் பாதுகாப்பு பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.














