அமேசான் காட்டிற்குள் ஏற்பட்ட விமான விபத்தில் 100 ராணுவ வீரர்கள் 17 நாட்கள் தீவிர தேடுதலில் ஈடுபட்டு கைக்குழந்தை உள்பட 4 பேர் உயிருடன் மீட்டுள்ளனர்.
கொலம்பியாவில் அமேசான் வனப்பகுதியில் இருந்து தம்பதி தனது 4 குழந்தைகளுடன் ஹெலிகாப்டரில் சன் ஜொஷி டி கவ்ரி நகருக்கு கடந்த மாதம் 1ம் தேதி சென்றுள்ளனர். அமேசான் அடவனப்பகுதியில் சென்றபோது ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி, தம்பதி என 3 பேர் உயிரிழந்தனர். ஆனால் 13 வயது, 9 வயது, 4 வயது 11 மாத கைக்குழந்தை உள்பட 4 பேர் விபத்தில் உயிர் பிழைத்தனர். இதையடுத்து மீட்புக்குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை கண்டுபிடித்தனர். அங்கு விமானி, தம்பதியர் என 3 பேரின் உடல்களை கைப்பற்றினார்.