கிழக்கு ஆப்பிரிக்காவின் தெற்கு சூடான் நாட்டின் யுனைட்டி மாகாணத்தில், ஜுபா நகரின் நோக்கி பறந்து சென்ற ஒரு சிறிய விமானம் விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர்.
அந்நாட்டு தகவல் துறை மந்திரி கேட்வெச் பிபல் கூறியபடி, பெட்ரோலியம் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை சுமந்து சென்ற அந்த விமானம் விபத்தில் சிக்கியது. உயிரிழந்தவர்களில் 2 சீனர்களும், 1 இந்தியரும் உள்ளனர். மேலும், ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.