விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், 160 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள WASP-69 b எனும் புறக்கோளில் வால்மீன் போன்ற நீண்ட வாயு வால் உள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இந்த வால் சுமார் 5,63,000 கிலோமீட்டர் நீளம் கொண்டது.
இந்த கோள் தனது நட்சத்திரத்தை 3.9 நாட்களில் ஒரு முறை சுற்றி வருகிறது. மேலும், அது நட்சத்திரத்திற்கு மிக அருகில் இருப்பதால், அதன் மீது மிக அதிகமான கதிர்வீச்சு படுகிறது. இதன் காரணமாக, இந்த கிரகம் தனது வளிமண்டலத்தை தொடர்ந்து இழந்து வருகிறது. ஒரு நொடிக்கு சுமார் 2,00,000 டன் வளிமண்டலத்தை இழப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர். இந்த வளிமண்டலம் நட்சத்திரக் காற்றால் இழுத்துச் செல்லப்பட்டு, வால்மீன் போன்ற நீண்ட வால் வடிவம் உருவாகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த கண்டுபிடிப்பு, கிரகங்களின் வளிமண்டலம் எவ்வாறு உருவாகிறது மற்றும் அவை எவ்வாறு மாறுகின்றன என்பது பற்றிய புதிய தகவல்களை வழங்குகிறது.














