வியாழன் மற்றும் அதன் 4 நிலவுகளை படம் பிடித்த ஐரோப்பிய செயற்கைக்கோள்

ஐரோப்பாவின் செயற்கைக்கோளான Pleiades Neo, வியாழன் கோள் மற்றும் அதன் 4 நிலவுகளை படம் பிடித்துள்ளது. சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கோளாக வியாழன் உள்ளது. வாயுக்களால் நிரம்ப உள்ள வியாழன் கோளில், அதிக நிலவுகள் உள்ளன. தற்போது வரை 92 நிலவுகளை வியாழன் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஐரோப்பிய செயற்கைக்கோள் எடுத்த புகைப்படத்தில், வியாழன் கோள் மற்றும் அதன் Ganymede, Callisto, Europa, Io ஆகிய 4 நிலவுகள் ஒரு சேர தெரிகின்றன. Pleiades Neo […]

ஐரோப்பாவின் செயற்கைக்கோளான Pleiades Neo, வியாழன் கோள் மற்றும் அதன் 4 நிலவுகளை படம் பிடித்துள்ளது.

சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கோளாக வியாழன் உள்ளது. வாயுக்களால் நிரம்ப உள்ள வியாழன் கோளில், அதிக நிலவுகள் உள்ளன. தற்போது வரை 92 நிலவுகளை வியாழன் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஐரோப்பிய செயற்கைக்கோள் எடுத்த புகைப்படத்தில், வியாழன் கோள் மற்றும் அதன் Ganymede, Callisto, Europa, Io ஆகிய 4 நிலவுகள் ஒரு சேர தெரிகின்றன. Pleiades Neo செயற்கைக்கோளால் எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த செயற்கைக்கோள் ஏர்பஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Pleiades Neo செயற்கைக்கோள், பூமியை கண்காணிப்பதற்காக அனுப்பப்பட்டதாகும். இந்த நிலையில், பூமியிலிருந்து வெகு தொலைவில் உள்ள வியாழன் மற்றும் அதன் நிலவுகளை இந்த செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளது, பெரிய சாதனையாக சொல்லப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. அதை தொடர்ந்து, இன்று ஐரோப்பாவின் முதல் வியாழன் திட்டம் செயல்படுத்த படுவதால், இந்தப் புகைப்படம் சர்வதேச கவனம் பெற்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu