பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியீடு - பள்ளிக் கல்வித்துறை 

April 26, 2023

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு மே.8 ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், நீட் தேர்வு மே 7-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாக பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். எனவே, தேர்வு […]

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு மே.8 ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், நீட் தேர்வு மே 7-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாக பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். எனவே, தேர்வு முடிவு வெளியீட்டை தள்ளிவைக்க வேண்டும் என பல தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்று, நீட் தேர்வுக்கு பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிட பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதன்படி பிளஸ் 2 தேர்வு முடிவு மே.8 ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தள முகவரியில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu