பெங்களூரு-மைசூரு எக்ஸ்பிரஸ் சாலையை பிரதமர் திறந்து வைக்கிறார்

February 25, 2023

பெங்களூரு-மைசூரு எக்ஸ்பிரஸ் சாலையை அடுத்த மாதம் (மார்ச்) 11-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார் கர்நாடக சட்டசபைக்கு மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை கர்நாடகத்தில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜனதா தேசிய தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக பிரதமர் மோடி கர்நாடகத்திற்கு அடிக்கடி வந்து பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இந்த நிலையில், அடுத்த மாதமும் பிரதமர் மோடி கர்நாடகம் வருகை தர உள்ளார். இதுகுறித்து […]

பெங்களூரு-மைசூரு எக்ஸ்பிரஸ் சாலையை அடுத்த மாதம் (மார்ச்) 11-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்

கர்நாடக சட்டசபைக்கு மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை கர்நாடகத்தில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜனதா தேசிய தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக பிரதமர் மோடி கர்நாடகத்திற்கு அடிக்கடி வந்து பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இந்த நிலையில், அடுத்த மாதமும் பிரதமர் மோடி கர்நாடகம் வருகை தர உள்ளார். இதுகுறித்து மந்திரி அஸ்வத் நாராயண் கூறுகையில், 11-ந் தேதி பிரதமர் வருகை பெங்களூரு-மைசூரு இடையே எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை திறந்துவைக்க பிரதமர் மோடி அடுத்த மாதம் 11-ந் தேதி கர்நாடகம் வருகை தர உள்ளார்.

மத்தூரில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று அவர் பேச இருக்கிறார். பெங்களூரு-மைசூரு எக்ஸ்பிரஸ் சாலையின் காரணமாக பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு செல்லும் நேரம் குறைய உள்ளதால், பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu