இந்தியா கூட்டணியின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார்.
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜக அரசிற்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணி அமைய முக்கிய காரணமாக இருந்தவர் பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ்குமார். இவர் இந்தியா கூட்டணி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். இதனால் இதற்கு முன்னதாக பீகார் மாநில முதல்வர் ஆக இருந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் பன்னிரண்டாம் தேதி பீகார் சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். தற்போது பிரதமர் மோடியை நிதிஷ் குமார் இன்று என்று சந்தித்து பேச உள்ளார். இதற்கு அடுத்ததாக உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜன தலைவர் ஜே.பி நட்டா ஆகியோரையும் சந்திக்க உள்ளதாக என தகவல் வெளியாகி உள்ளது.