91 எஃப்எம் டிரான்ஸ்மிட்டர்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

April 29, 2023

நாடு முழுவதும் வானொலி சேவையை விரிவாக்கம் செய்ய ஏதுவாக 91 எஃப்எம் டிரான்ஸ்மிட்டர்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதுகுறித்து பிரதமர் மோடி பேசுகையில், மன்கிபாத் மூலமாக வானொலியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் என்ற வகையில் நானும் கூடுதல் மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டு மக்களுடன் உணர்வுப்பூர்வமாக உரையாடுவது வானொலி மூலமாக மட்டுமே முடியும். இதுவரை வானொலி வசதி மறுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அரசின் கொள்கைகளை முன்னெடுத்து செல்வதிலும், முக்கிய தகவல்களை உரிய நேரத்தில் தருவதிலும் […]

நாடு முழுவதும் வானொலி சேவையை விரிவாக்கம் செய்ய ஏதுவாக 91 எஃப்எம் டிரான்ஸ்மிட்டர்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி பேசுகையில், மன்கிபாத் மூலமாக வானொலியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் என்ற வகையில் நானும் கூடுதல் மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டு மக்களுடன் உணர்வுப்பூர்வமாக உரையாடுவது வானொலி மூலமாக மட்டுமே முடியும். இதுவரை வானொலி வசதி மறுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அரசின் கொள்கைகளை முன்னெடுத்து செல்வதிலும், முக்கிய தகவல்களை உரிய நேரத்தில் தருவதிலும் இந்த 91 பண்பலை டிரான்ஸ்மிட்டர்களின் தொடக்கம் திருப்புமுனையை ஏற்படுத்தும்.

இந்தியாவில் பண்பலை ஒலிபரப்பு அனைத்து மொழிகளிலும், குறிப்பாக 27 கிளை மொழிகள் உள்ள பிராந்தியங்களில் ஒலிபரப்பு செய்யப்படும். கலாச்சார இணைப்பையும், அறிவுசார் இணைப்பையும் அரசு வலுப்படுத்தி வருகிறது. 140 கோடி மக்களையும், நாட்டையும் இணைப்பதுதான் வானொலி போன்ற அனைத்து தகவல் தொடர்பு ஊடகங்களின் தொலைநோக்குப் பார்வையாக இருக்க வேண்டும் என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu