விமான நிலைய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

April 10, 2023

விமான நிலைய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்தார். ஐதராபாத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வருகை தந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் […]

விமான நிலைய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்தார். ஐதராபாத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வருகை தந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துப் பார்வையிட்டார். பிரதமரை வரவேற்க அவர் செல்லும் பகுதிகளில் எல்லாம் பா.ஜ.க. சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu