சர்வதேச விமான கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

February 13, 2023

சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை சர்வதேச விமான கண்காட்சி மற்றும் சாகசம் நடந்து வருகிறது. கடந்த முறை நடந்த விமான கண்காட்சியின் மூலமாக பல லட்சம் கோடி வர்த்தகம் நடந்தது. இந்நிலையில் 14வது ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சியை தேசிய கொடியை அசைத்து பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஆசியாவின் மிகப் பெரிய விமான கண்காட்சியான இதில் பெல், பிஇஎம்எல், எச்.ஏ.எல். […]

சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை சர்வதேச விமான கண்காட்சி மற்றும் சாகசம் நடந்து வருகிறது. கடந்த முறை நடந்த விமான கண்காட்சியின் மூலமாக பல லட்சம் கோடி வர்த்தகம் நடந்தது. இந்நிலையில் 14வது ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சியை தேசிய கொடியை அசைத்து பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

ஆசியாவின் மிகப் பெரிய விமான கண்காட்சியான இதில் பெல், பிஇஎம்எல், எச்.ஏ.எல். உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்புகள், கனரக மற்றும் ராணுவ தளவாடங்களும் இடம் பெற்றுள்ளன. இதில் இந்திய போர் விமானங்கள் மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஜெர்மன், ரஷ்யா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த அதி நவீன போர் விமானங்களும் பங்கேற்று வானில் சாகசங்களில் ஈடுபடுகின்றன. வருகிற 17ம் தேதி வரை 5 நாட்கள் கண்காட்சி நடைபெற உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu