தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

January 27, 2023

பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் தேர்வு பற்றி கலந்துரையாடினார். கடந்த 2018ம் ஆண்டில் இருந்து பிரதமர் மோடி பரிக்ஷா இ சர்ச்சா என்ற பெயரில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார். அதில் தேர்வு பயம் போக்குவது எவ்வாறு, அதிலிருந்து எவ்வாறு மீள்வது, மனஅழுத்தமின்றி தேர்வு எழுதுவது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை வழங்கினார். இந்நிலையில் 2023ம் ஆண்டுக்கான பரிக்ஷா இ சார்ச்சா நிகழ்ச்சி இன்று காலை […]

பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் தேர்வு பற்றி கலந்துரையாடினார்.

கடந்த 2018ம் ஆண்டில் இருந்து பிரதமர் மோடி பரிக்ஷா இ சர்ச்சா என்ற பெயரில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார். அதில் தேர்வு பயம் போக்குவது எவ்வாறு, அதிலிருந்து எவ்வாறு மீள்வது, மனஅழுத்தமின்றி தேர்வு எழுதுவது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை வழங்கினார். இந்நிலையில் 2023ம் ஆண்டுக்கான பரிக்ஷா இ சார்ச்சா நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

இதில் அவர் பேசுகையில், தேர்வில் மாணவர்களிடம் பெற்றோர்கள் அதிகம் எதிர்பார்ப்பது இயற்கையானது தான். எதிர்ப்பார்புகளை பற்றி மாணவர்கள் கவலைப்படமல் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தேர்வு மதிப்பெண் குறித்து அழுத்தம் கொடுக்க வேண்டாம். மாணவர்கள் தங்கள் நேரத்தையும் படைப்பாற்றலையும் நல்ல முறையில் பயன்படுத்தினால் வெற்றி கிட்டும் என்றார். நிகழ்ச்சிக்காக சுமார் 30 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ள நிலையில் 20 லட்சம் கேள்விகள் பெறப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu