தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு ரூ.5,800 கோடி மதிப்பில் அறிவியல் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
2023-ம் ஆண்டுக்கான தேசிய தொழில்நுட்ப தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ரூ.5,800 கோடி மதிப்பிலான அறிவியல் திட்டங்களை நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், இந்திய வரலாற்றில் மே 11 மிகவும் மதிப்புமிக்க நாட்களில் ஒன்று. இந்திய விஞ்ஞானிகள் பொக்ரானில் நிகழ்த்திய மகத்தான சாதனை ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியது. பொக்ரான் அணு ஆயுத சோதனை இந்தியாவின் அறிவியல் திறன்களை சர்வதேச நாடுகளுக்கு நிரூபிக்க உதவியது.
மேலும், உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டு தரவரிசையில் 81 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 40 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்று கூறினார்.