நாடு முழுவதும் நடைபெற இருக்கும் ரோஜ்கர் மேளா திட்டத்தின் படி பல்வேறு பதவிகளின் கீழ் சுமார் 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதங்களை பிரதமர் மோடி வழங்குகிறார்.
நாடு முழுவதும் புதிய பணியாளர்கள், வருவாய்த்துறை, நிதிச் சேவை துறை, அஞ்சல் துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, பாதுகாப்பு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மத்திய பொதுस्த்துறை நிறுவனங்கள், நீர்வளத்துறை மற்றும் உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களில் இருந்து பல்வேறு பதவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் 70 ஆயிரம் பேருக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு பணி நியமன கடிதம் வழங்கப்பட உள்ளது. இது ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் வழங்கப்பட இருக்கிறது. இந்நிகழ்ச்சி ஜூலை 22 ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் காணொளி மூலம் 44 இடங்களில் நடைபெற உள்ளது














