பல்வேறு இடங்களில் ஆறு எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறக்க உள்ளார் பிரதமர் மோடி

February 20, 2024

பிரதமர் மோடி ஆறு நாட்களில் ஆறு எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறக்க உள்ளார். பிரதமர் மோடி இன்று காஷ்மீருக்கு பயணம் செல்கிறார். அதில் ஜம்முவில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு சம்பா மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைக்க உள்ளார். இந்த மருத்துவமனையானது 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 227, ஏக்கர் பரப்பளவில் 1660 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 25ஆம் தேதி பிரதமர் மோடி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பங்கேற்க உள்ள […]

பிரதமர் மோடி ஆறு நாட்களில் ஆறு எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறக்க உள்ளார்.

பிரதமர் மோடி இன்று காஷ்மீருக்கு பயணம் செல்கிறார். அதில் ஜம்முவில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு சம்பா மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைக்க உள்ளார். இந்த மருத்துவமனையானது 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 227, ஏக்கர் பரப்பளவில் 1660 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து 25ஆம் தேதி பிரதமர் மோடி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பங்கேற்க உள்ள விழாவில் மேலும் 5 மருத்துவமனைகளை திறந்து வைக்க உள்ளார். இதில் ராஜ்கோட், மங்களகிரி, பதிண்டா, ரேபரேலி, கல்யாணி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளை திறந்து வைக்க உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu