உலகின் நீண்ட தூர சொகுசு கப்பலை பிரதமர் மோடி 13-ந்தேதி தொடங்கி வைக்கிறார்

January 6, 2023

உலகின் மிக நீண்ட தூர சொகுசு கப்பலை பிரதமர் மோடி 13-ந்தேதி தொடங்கி வைக்கிறார். உலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டமாக கருதப்படும் கங்கா விலாஸ் சொகுசு கப்பல் சுற்றுலாவை பிரதமர் மோடி வருகிற 13-ந்தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதற்கான பணிகளை வாரணாசி மாவட்ட நிர்வாகம் தொடங்கி உள்ளது. வாரணாசியின் ரவிதாஸ் படித்துறையில் இருந்து கிளம்பும் இந்த சொகுசு கப்பல் காசிப்பூர், பங்சார், பாட்னா வழியாக கொல்கத்தாவை அடைகிறது. பின்னர் வங்காளதேசம் வழியாக மொத்தம் 3,200 கி.மீ. […]

உலகின் மிக நீண்ட தூர சொகுசு கப்பலை பிரதமர் மோடி 13-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.

உலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டமாக கருதப்படும் கங்கா விலாஸ் சொகுசு கப்பல் சுற்றுலாவை பிரதமர் மோடி வருகிற 13-ந்தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதற்கான பணிகளை வாரணாசி மாவட்ட நிர்வாகம் தொடங்கி உள்ளது. வாரணாசியின் ரவிதாஸ் படித்துறையில் இருந்து கிளம்பும் இந்த சொகுசு கப்பல் காசிப்பூர், பங்சார், பாட்னா வழியாக கொல்கத்தாவை அடைகிறது. பின்னர் வங்காளதேசம் வழியாக மொத்தம் 3,200 கி.மீ. பயணம் செய்து அசாமின் திப்ருகரை மார்ச் 1-ந்தேதி அடைகிறது.

வங்காளதேசத்தில் மட்டும் 15 நாட்கள் இந்த கப்பல் பயணம் செய்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய 2 நதிகளான கங்கை மற்றும் பிரம்மபுத்ராவில் இந்த கப்பல் பயணம் செய்வது சிறப்பாகும். இந்த கப்பலில் 18 கேபின்கள் உள்ளன. எல்.இ.டி. டி.வி., நவீன படுக்கை வசதி, பால்கனி, உணவகம், ஸ்பா என ஏராளமான ஆடம்பர வசதிகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu