ரஷ்ய பயணம் செல்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி வருகிற ஜூலை எட்டாம் தேதி ரஷ்யா பயணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவும் இந்தியாவும் பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியாக ஆழ்ந்த உறவை கொண்டுள்ளனர். கடந்த 2 வருடங்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளில் உக்ரைன் மற்றும் ரஷ்யா ஈடுபட வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. ஆனால் இரண்டு நாடுகளும் இதுவரை உடன்படவில்லை. இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவிற்கு […]

பிரதமர் மோடி வருகிற ஜூலை எட்டாம் தேதி ரஷ்யா பயணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவும் இந்தியாவும் பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியாக ஆழ்ந்த உறவை கொண்டுள்ளனர். கடந்த 2 வருடங்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளில் உக்ரைன் மற்றும் ரஷ்யா ஈடுபட வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. ஆனால் இரண்டு நாடுகளும் இதுவரை உடன்படவில்லை. இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவிற்கு வருகை தரும்படி பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்ய பயணம் மேற்கொண்ட போது பிரதமரை சந்திக்க ஆவலாக இருப்பதாகவும், இத்னால் இருதரப்பு உறவுகளிலும் முன்னேற்றம் காணவும் ஒரு வாய்ப்பு அமையும் என ரஷ்ய அதிபர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடி வரும் ஜூலை 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை ரஷ்யா மற்றும் ஆஸ்திரியாவிற்கு பயணம் செய்ய உள்ளதாக வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இந்த பயணத்தின் போது ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசுவார் என்று தெரியவந்துள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu