பிரான்சில் தேசிய தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார். மேலும் அங்கு பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் சார்பில் எலிசி அரண்மனையில் இரவு விருந்து வழங்கப்பட்டது. அதோடு பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆர் ஹானர் என்னும் உயரிய விருதை இமானுவேல் மேக்கரான் வழங்கினார்.
பின்னர் மோடி- மெக்ரான் இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். இதில் இரு நாடுகளிடையே விண்வெளி, ராணுவம் உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மேலும் பிரான்சிலிருந்து 26 ரபேல் விமானங்களும், கூடுதலாக மூன்று ஸ்கார்பின் நீர்மூழ்கி கப்பல்களை வாங்கவும் ஒப்பந்தம் இடப்பட்டது . மேலும் பிரதமர் மோடி இரு நாடுகளின் இந்த மகத்தான பயணத்தை விரைவு படுத்தவும் வலுப்படுத்தவும் நீங்கள் பணியாற்ற வேண்டும் என பிரான்ஸ் மற்றும் இந்திய தொழிலதிபர்களை சந்தித்து பேசினார்.
பின்பு அவருக்கு அரசு சார்பில் வழி யனுப்பு நிகழ்ச்சி நடந்தது. பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நோக்கி புறப்பட்டார்.அரபு எமிரேட்சின் அதிபரும், அபுதாபி பட்டது இளவரசர் ஷேக் முகமது பின் சமீத் அல் ரஹ்யானை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் பிரதமரின் வருகை ஆற்றல், கல்வி, சுகாதாரம்,உணவு பாதுகாப்பு மற்றும் கலாச்சாரம் போன்ற பல்வேறு துறைகளில் முன்னெடுத்துச் செல்வதற்கான அடையாளம் என்று இந்திய வெளியுறவுத்துறை கூறுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சின் ஒரு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இந்தியாவிற்கு மீண்டும் புறப்படுவார்.