குஜராத் மாநிலத்தில், மைக்ரான் நிறுவனத்தின் செமி கண்டக்டர் சிப் பரிசோதனை மற்றும் பேக்கிங் ஆலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான 2.7 பில்லியன் டாலர்கள் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்திற்கு முன் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
மைக்ரான் நிறுவனத்தின் இந்த செமி கண்டக்டர் ஆலைக்கு, மத்திய அரசின் சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக மூத்த அரசாங்க அதிகாரி தெரிவித்துள்ளார். பி எல் ஐ திட்டத்தின் கீழ், கிட்டத்தட்ட 110 பில்லியன் ரூபாய் மதிப்பிலான உதவித்தொகை, மைக்ரான் நிறுவனத்திற்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.