பாரதிய ஜனதா கட்சி சார்பில் இரண்டு லட்சம் பெண்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டம் கேரளாவில் நடைபெற உள்ளது.
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் கேரள மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இரண்டு லட்சம் பெண்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டம் திருச்சூர் தேக்கங்காடு மைதானத்தில் ஜனவரி 2ஆம் தேதி நடத்தப்படுகிறது.ஸ்ரீ சக்தி சங்கமம் என்ற தலைப்பில் நடத்தப்படும் இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.