பிரதமர் மோடி குவைத் பயணம்: டிசம்பர் 21-22க்கு சுற்றுப்பயணம்

December 19, 2024

பிரதமர் மோடி குவைத் நாட்டிற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில், குவைத் நாட்டிற்கு அரசுமுறை சுற்றுப்பயணமாக செல்கிறார். குவைத் மன்னர் ஷேக் மெஷல் அல் அஹமது அல் ஜபர் அவர்களின் அழைப்பின் பேரில் இந்த பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த பயணத்தில் பிரதமர் மோடி, குவைத் மன்னர், வெளியுறவுத்துறை மந்திரி மற்றும் பட்டத்து இளவரசர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளார். மேலும் […]

பிரதமர் மோடி குவைத் நாட்டிற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில், குவைத் நாட்டிற்கு அரசுமுறை சுற்றுப்பயணமாக செல்கிறார். குவைத் மன்னர் ஷேக் மெஷல் அல் அஹமது அல் ஜபர் அவர்களின் அழைப்பின் பேரில் இந்த பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த பயணத்தில் பிரதமர் மோடி, குவைத் மன்னர், வெளியுறவுத்துறை மந்திரி மற்றும் பட்டத்து இளவரசர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளார். மேலும் அவர் குவைத் வாழும் இந்தியர்களையும் சந்தித்து பேசுவார். இந்த பயணம் இந்தியா-குவைத் உறவை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 43 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது. கடைசியாக 1981-ம் ஆண்டு, பிரதமர் இந்திரா காந்தி குவைத் சென்றிருந்தார்.

இந்த பயணம், இரு நாடுகளுக்குமான வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu