பாகிஸ்தான் தேர்தல் ஆணையம், அந்நாட்டின் தேர்தல் முடிவுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அவரது தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் தலைவரான நவாஸ் ஷரீப், என் ஏ 130 தொகுதியில் போட்டியிட்டார். இந்த நிலையில், அவர் 171024 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் தேர்தலில், நவாஸ் ஷெரீப் கட்சி, இம்ரான் கான் கட்சி மற்றும் பிலாவல் பூட்டோ கட்சி ஆகிய மூன்றுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.