கத்தோலிக்க தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் (88) மூச்சுக் குழாய் அழற்சி காரணமாக ரோம் நகரின் ஜெமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிமோனியா பாதிப்பு இருப்பதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று வாடிகன் அறிவித்துள்ளது. பரிசோதனைகள் மற்றும் எக்ஸ்ரே முடிவுகள் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதை காட்டுகின்றன.
மருத்துவமனையில் இருப்பினும், போப் பிரார்த்தனையில் ஈடுபட்டார், புத்தகங்கள் வாசித்தார் என்றும், மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார் என்றும் வாடிகன் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அவருக்காக பிரார்த்தனைகள் தொடர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டாலும், அவரது மனநிலை உற்சாகமாகவே உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.