அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில் கேரளாவில் அதிக போக்சோ வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன.
நாட்டில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்முறைகளை குறித்த போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் அதன் வன்முறைகள் மேலும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இதனை கட்டுப்படுத்தும் வகையில் அரசு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான சட்டங்களுக்கு எதிரான பாதுகாப்பு மசோதா 2012 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2019 இந்த சட்டம் திருத்தப்பட்டு தண்டனைகள் கடுமையாக்கப்பட்டது. இதில் 16 வயதிற்குட்பட்டவராக இருந்தால் குற்றத்தில் ஈடுபட்டவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும். தீவிரத் தாக்குதலுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் ஏராளமான போக்சோ வழக்குகள் அனைத்து மாநிலங்களிலும் தொடரப்பட்டு வருகின்றன. இவற்றை ஒப்பிடுகையில் கேரளாவில் அதிக வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன. தற்போது பள்ளி குழந்தைகள் எளிதில் தெரிந்து கொள்வதற்காக கேரள மாநில பள்ளி பாடத்திட்டத்தில் போக்சோ சட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. இது வருகிற கல்வியாண்டு முதல் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இடம்பெற உள்ளது.