பொங்கல் முடிந்து சென்னை திரும்புவோரின் வாகன நெரிசலை குறைக்க 3 நாட்கள் காவல்துறை சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
திருப்போரூர் வழியாக சென்னைக்குள் நுழையும் கனரக வாகனங்களை செங்கல்பட்டு வழியாக செல்ல உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. ஒரகடம் சந்திப்பில் இருந்து சாதாரண வாகனங்களை திருப்பி ஸ்ரீபெரும்புதூர் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளியூரில் இருந்து சென்னை வருவோரின் கனரக வாகனங்கள் பரனூர் வழியாக ஸ்ரீபெரும்புதூருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி, ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளில் இன்று பகல் 2 மணி முதல் ஜன.20 வரை கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம் புதிய பாலத்தில் இன்று பகல் 2 மணி முதல் 12 மணி வரை ஒருவழி போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.