ஒலிபெருக்கி, பட்டாசு வெடிக்க தடை - விநாயகர் சதுர்த்தி

September 11, 2023

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு கட்டுப்பாட்டுகள் மற்றும் வழிமுறைகளை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் வருகின்ற 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சிறிய மற்றும் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் பூஜை செய்து பின்னர் நீர்நிலைகளில் கரைக்கப்படும். இதில் பொன்னேரியில் மட்டும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் 55 விநாயகர் சிலைகள் பொது இடத்தில் வைக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாசு கட்டுப்பாடு வாரியம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதில் சிலை […]

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு கட்டுப்பாட்டுகள் மற்றும் வழிமுறைகளை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் வருகின்ற 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சிறிய மற்றும் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் பூஜை செய்து பின்னர் நீர்நிலைகளில் கரைக்கப்படும். இதில் பொன்னேரியில் மட்டும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் 55 விநாயகர் சிலைகள் பொது இடத்தில் வைக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாசு கட்டுப்பாடு வாரியம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதில் சிலை களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பொருள்களை இதில் உபயோகப்படுத்த கூடாது. எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது. குறிப்பிட்ட நாட்களுக்குள் சிலைகளை குறிப்பிட்ட இடத்தில் தான் கரைக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுமே சிலைகளை எடுத்துச் செல்ல வேண்டும். இதனை மீன் பாடி வண்டி, பால் வண்டி ஆகியவற்றில் எடுத்து செல்லக்கூடாது. மேலும் வண்டியில் அதிகமான ஆட்களை எடுத்துச் செல்லக்கூடாது என கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu