சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளுவர் உள்ளடங்கிய 11 மாவட்டங்களில் திமுக வாக்குச்சாவடி முகவர் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற உள்ளது.
பாராளுமன்ற தேர்தலுக்கு 5 மாதமே உள்ள நிலையில் திமுகவில் வாக்கு சாவடிகளுக்கு பூத் ஏஜெண்டுகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சி மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை திமுக ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த கூட்டங்களை மண்டலம் வாரியாக நடத்தி வருகின்றது. டெல்டா மாவட்டங்களுக்கான கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அதன் பின்னர் கூட்டம் ராமநாதபுரத்தில் கொங்கு மண்டலம், மேற்கு மண்டலங்களில் நடைபெற்றது.
பின்னர் தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் 11565 பேர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த பயிற்சி பாசறை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடு திருவள்ளூரில் நடைபெற்று வருகிறது.