பாராளுமன்ற தேர்தலில் ஆறாம் கட்டு வாக்குப்பதிவு மாலை 6:00 மணியுடன் நிறைவடைந்தது.
பாராளுமன்ற தேர்தலில் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு இன்று டெல்லி, அரியானா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் காலையில் 7:00 மணி முதல் தொடங்கியது. அதன்படி இன்று 58 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குபதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதில் மேற்கு வங்க மாநிலத்தில் அதிகபட்சமாக 77.99 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக ஜம்மு காஷ்மீர் 51.35 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது














