பொங்கல் பண்டிகையை ஒட்டி விரைவு ரயில்கள் முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது.
வருடம் தோறும் பயணிகளின் வசதிக்காக பண்டிகை நாட்களில் 120 நாட்களுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும். அந்த வகையில் வருகின்ற ஜனவரி மாதம் 14ஆம் தேதி போகி பண்டிகை தொடங்கி ஜனவரி 15,16,17 தேதிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தற்போது விரைவு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது. இதனை IRCTC இணையதளம் வாயிலாகவும் டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதில் செப்டம்பர் 13,14,15,16,17,18,19
ஆம் தேதி முன்பதிவு செய்வோர்கள் ஜனவரி 11,12,13,14,15,16,17 ஆம் தேதி என முறையே பயணம் செய்து கொள்ளலாம்.