தமிழ்நாடு அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வூதியதாரர்கள் ஆகியவருக்கு பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு பொங்கல் பரிசு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 2024 வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சி மற்றும் டி பிரிவை சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம அலுவலர்கள், ஆகியோர்களுக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மிகை ஊதியமாக மூன்றாயிரம் வழங்கப்பட உள்ளது. மேலும் முழு நேர, பகுதி நேர பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சிறப்பு மிகை ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் தமிழக அரசுக்கு ரூபாய் 167 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.














