இன்று அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க திட்டமிட்டுள்ளார். இதன் கீழ், 2,20,94,585 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். பரிசில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு வழங்கப்பட உள்ளது. அத்துடன், விலையில்லா வேட்டி மற்றும் சேலைகளும் வழங்கப்படும். நேற்று சைதாப்பேட்டை சின்ன மலையில் உள்ள ரேஷன் கடையில் பரிசுகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இன்று அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் இந்த பரிசை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.